search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர் பலி"

    • இரும்பு கதவு சிறுவன் நித்தீஷ் மீது விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவன் சம்பவ இடத்திலேயே பலியானான்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    சென்னை, அயனாவரம், ஹவுசிங் போர்டு பெரியார் சாலை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். மனைவி துர்கா, மகன்கள் ஜீவா, நித்தீஷ் (வயது10) மற்றும் உறவினர்கள் 30 பேருடன் பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார்.

    அவர்கள் பெரியபாளையத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்தனர். சாமி தரிசனம் முடிந்தவுடன் அவர்கள் தங்கியிருந்த அறைக்கு சென்றனர்.

    அப்போது விடுதி அறையின் அருகே சிறுவன் நித்தீஸ் விளையாடிக் கொண்டிருந்தான். திடீரென அங்கிருந்த இரும்பு கதவு சிறுவன் நித்தீஷ் மீது விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவன் சம்பவ இடத்திலேயே பலியானான்.

    இது குறித்து பெரியபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆனால் இந்த வழக்கில் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி பலியான நித்தீசின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இன்று காலை திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சிறுவன் சாவில் உரிய விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    திருவள்ளூர் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.இதன் காரணமாக கலெக்டர் அலுவலகம் இன்று காலை பரபரப்பாக காணப்பட்டது.

    • குளத்தில் குளித்துக்கொண்டிருந்தபோது ரஞ்சித்குமார் திடீரென ஆழமான பகுதிக்கு சென்றார்.
    • தீயணைப்பு வீரர்கள் சுமார் 20 அடி ஆழமுள்ள அந்த குளத்தில் மூழ்கி இறந்த ரஞ்சித் குமாரின் உடலை மீட்டனர்.

    களக்காடு:

    சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகாவுக்கு உட்பட்ட பள்ளிப்பட்டி மேச்சேரியை சேர்ந்தவர் கருப்பண்ணன். இவரது மகன் ரஞ்சித் குமார் (வயது 22).

    இவர் களக்காடு அருகே வடுகச்சிமதிலில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் படித்து வந்தார். நேற்று மாலை இவர் தனது நண்பர்களுடன் வடுகச்சிமதிலை அடுத்த ஆலங்குளத்தில் உள்ள ஒரு குளத்திற்கு குளிக்க சென்றார்.

    அப்போது குளத்தில் குளித்துக்கொண்டிருந்தபோது ரஞ்சித்குமார் திடீரென ஆழமான பகுதிக்கு சென்றார். உடனே அவரது நண்பர்கள் அவரை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் ரஞ்சித்குமாரை மீட்க முடியவில்லை.

    இதுபற்றி நாங்குநேரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து இன்று காலை தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து சுமார் 20 அடி ஆழமுள்ள அந்த குளத்தில் மூழ்கி இறந்த ரஞ்சித் குமாரின் உடலை மீட்டனர். இதுகுறித்து திருக்குறுங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • சின்னசேலம் அருகே தனியார் கல்லூரி பஸ் மோதி மாணவர் பலியானார்.
    • கல்லூரி வளாகம் முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே எடுத்துவாய் நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்.அவரது மனைவி கோவிந்தம்மாள். இவர்களது மகன் திவாகர் (வயது 19). இவர் சின்னசேலம் அருகே இந்திலி கிராமத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதுநிலை 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கல்லூரிக்கு தனது இரு சக்கர வாகனத்தில் நேற்று கல்லூரி முடித்துவிட்டு மாலையில் கல்லூரியில் இருந்து வெளியே வந்தார்.

    அப்போது அதே கல்லூரியை சேர்ந்த பஸ் ஒன்று கல்லூரி வளாகத்திற்கு உள்ளே நுழைந்த போது மாணவர் திவாகர் எதிர்பாராத விதமாக பஸ் மோதியதில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்து போனார் இதுகுறித்து சின்னசேலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வரைந்து வந்த போலீசார் திவாகரன் உடலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க கல்லூரி வளாகம் முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

    • மானூர் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
    • படுகாயம் அடைந்த அரவிந்த் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த கங்கைகொண்டான் அருகே உள்ள பருத்திகுளம் அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் அரவிந்த்(வயது 18).

    இவர் பேட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு பயின்று வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(26). இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் அரவிந்தை அழைத்துக்கொண்டு நெல்லைக்கு சென்றார்.

    மானூர் பல்லிக்கோட்டை அருகே சாலையில் சென்றபோது மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

    இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த அரவிந்த் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். சுப்பிரமணியனுக்கு படுகாயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து மானூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சுப்பிரமணியன் உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்த அரவிந்த் உடல் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை சி.சி.டி.வி. காமிராக்கள் மூலம் தேடி வருகின்றனர்.

    • நண்பர் ஜீவா என்பவருடன் மற்றொரு நண்பரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் மணலி விரைவு சாலையில் சென்றார்.
    • கண்டெய்னர் லாரியின் டயரில் சிக்கிய பால் கிருபாகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர், விம்கோ நகர், காந்தி நகரை சேர்ந்தவர் ஐசக். இவரது மகன் பால் கிருபாகரன் (வயது 21). இவர் தண்டையார் பேட்டையில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இவர் நேற்று இரவு 10 மணி அளவில் நண்பர் ஜீவா(18) என்பவருடன் மற்றொரு நண்பரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் மணலி விரைவு சாலையில் சென்றார். மோட்டார் சைக்கிளை பால்கிருபாகரன் ஓட்டினார்.

    ஜோதி நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் இருந்து வேகமாக வந்த கண்டெய்னர் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் கண்டெய்னர் லாரியின் டயரில் சிக்கிய பால் கிருபாகரன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். ஜீவா லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்து நடந்ததும் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதுகுறித்து சாத்தாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒரே மகன் விபத்தில் இறந்ததால் சஞ்சீவ் சங்கர் மற்றும் நந்தினி ஆகியோர் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டனர்.
    • வீட்டில் இருந்த சஞ்சீவ்சங்கர், நந்தினி ஆகியோர் பூச்சி மருந்தை குடித்தனர்.

    வடவள்ளி:

    கோவை வடவள்ளி அருகே உள்ள நவாவூர் கணுவாய் ரோட்டை சேர்ந்தவர் சஞ்சீவ் சங்கர் (வயது 46). தொழில் அதிபர். இவரது மனைவி நந்தினி (45).

    இவர்களது ஒரே மகன் ரவி கிருஷ்ணா (22). கல்லூரி மாணவரான இவர் தனது நண்பர்களுடன் பேரூர் அருகே உள்ள ரிசார்ட்டுக்கு ஓணம் பண்டிகை கொண்டாட சென்றார். பின்னர் மறுநாள் காலையில் நண்பர்களுடன் ஒரு காரில் வீட்டிற்கு திரும்பினார். கார் தென்னமநல்லூர் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து கிணற்றுக்குள் பாய்ந்தது. இதில் ரவி கிருஷ்ணன் உள்பட 3 பேர் இறந்தனர்.

    இந்தநிலையில் தங்களது ஒரே மகன் விபத்தில் இறந்ததால் சஞ்சீவ் சங்கர் மற்றும் நந்தினி ஆகியோர் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டனர். அவர்களுக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆறுதல் கூறி வந்தனர். மகன் இறந்த துக்கம் தாங்க முடியாத நிலையில் இருந்த கணவன்-மனைவி இருவரும் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர்கள் தற்கொலை செய்வது என முடிவு செய்தனர்.

    அதன்படி நேற்று முன்தினம் வீட்டில் இருந்த சஞ்சீவ்சங்கர், நந்தினி ஆகியோர் பூச்சி மருந்தை குடித்தனர். சிறிது நேரத்தில் மயங்கினர். நந்தினியின் அண்ணன் அவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். ஆனால் போனை யாரும் எடுக்கவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த அவர் உடனடியாக நந்தினியின் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டில் தனது தங்கை மற்றும் அவரது கணவர் சஞ்சீவ் சங்கர் ஆகியோர் விஷம் குடித்த நிலையில் வாயில் நுரை தள்ளியபடி உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு கணவன்-மனைவி இருவரையும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.

    ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நள்ளிரவு 12.45 மணியளவில் நந்தினி பரிதாபமாக இறந்தார். சங்சீவ் சங்கர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பவித்திரன் மேல்மருவத்தூர் தனியார் கல்லூரி ஒன்றில் என்ஜினியரிங் படித்து வருகிறார்.
    • விவசாய நிலத்தில் உள்ள வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மோட்டார் பம்ப் சுவிட்ச்சை போட்டபோது எதிர்பாராத விதமாக உடலில் மின்சாரம் பாய்ந்தது.

    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றம் அடுத்த வீராபுரத்தை சேர்ந்தவர் மகன் பவித்திரன், (வயது 20) மேல்மருவத்தூர் தனியார் கல்லூரி ஒன்றில் என்ஜினியரிங் படித்து வருகிறார். அவரது விவசாய நிலத்தில் உள்ள வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மோட்டார் பம்ப் சுவிட்ச்சை போட்டபோது எதிர்பாராத விதமாக உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட பவித்திரன் அதே இடத்தில் உயிரிழந்தார்.

    திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கருமந்துறையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது.
    • மணியா குண்டம் காட்டு வளவு ஏரியில் குளிக்கச் சென்றார். அப்போது, தண்ணீரில் பிர வீன் மூழ்கி உயிரிழந்தார்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, கரு மந்துறை யில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இங்கு தர்மபுரி மாவட்டம் அரூர் சித்தேரி பகுதியைச் சேர்ந்த வேடன் மகன் பிரவீன்(வயது 18) விடுதியில் தங்கி படித்து வந்தார். இவர் 5 மாணவர்களுடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள மணியா குண்டம் காட்டு வளவு ஏரியில் குளிக்கச் சென்றார். அப்போது, தண்ணீரில் பிர வீன் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து கருமந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நித்தின் நண்பர்களுடன் மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்தார்.
    • ராட்சத அலையில் சிக்கிய நித்தின் கடலில் மூழ்கினார்.

    மாமல்லபுரம்:

    ஐதராபாத்தை சேர்ந்தவர் நித்தின்(வயது20). இவர் கர்நாடகா மாநிலத்தில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் பயோடெக் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் நண்பர்களுடன் மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்தார். அப்போது அவர்கள் கடற்கரை கோயில் அருகே கடலில் குளித்தனர்.

    இதில் ராட்சத அலையில் சிக்கிய நித்தின் கடலில் மூழ்கினார். நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. சிறிது நேரத்தில் கடற்கரை கோயில் அருகே நித்தின் பிணமாக கரை ஒதுங்கினார். இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உயிரிழந்த 15 வயது சிறுவன் குருமூர்த்தியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
    • இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் பால்ராஜ் (வயது 24).

    விளாத்திகுளம் அரசு மருத்துவமனை சாலையில் நித்யா டிக்கரிங் வெல்டிங் வெர்க்ஸ் எனும் பெயரில் சொந்தமாக வெல்டிங் ஒர்க்‌ஷாப் நடத்தி வருகிறார்.

    இவருடைய ஒர்க்‌ஷாப்பில், பகுதி நேர பணியாளராக பணிபுரிந்து வந்த அதே பகுதியைச் சேர்ந்த கர்ணமகாராஜன் என்பவரின் மகன் குருமூர்த்தி (15). என்ற 9-ம் வகுப்பு பயின்று வந்த சிறுவன், வழக்கம்போல இன்றும் தனது வேலையை முடித்துவிட்டு இரவில் பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தான். அப்போது தவறுதலாக மின்சார சுவிட்ச் பெட்டியை காலால் மிதித்ததில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியுள்ளது.

    இதனைக் கண்ட கடையின் உரிமையாளர் பால்ராஜ் குருமூர்த்தியை காப்பாற்ற மின் ஒயரை இழுத்தார். அப்போது அவரின் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் கையில் ரத்த காயம் ஏற்பட்டது.

    இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு குருமூர்த்தியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் இளவரசு தலைமையிலான போலீசார் மின்சார விபத்து குறித்து வெல்டிங் ஒர்க்‌ஷாப் உரிமையாளர் பால்ராஜிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் உயிரிழந்த 15 வயது சிறுவன் குருமூர்த்தியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 19). திருச்சி ஈ.வெ.ரா., கல்லூரியில் முதலாம் ஆண்டு விலங்கியல் படித்து வந்தார்.
    • நீச்சல் தெரியாத லோகநாதன் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினார்.

    திருச்சி :

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 19). திருச்சி ஈ.வெ.ரா., கல்லூரியில் முதலாம் ஆண்டு விலங்கியல் படித்து வந்தார். நேற்று மாலை இவர் தனது அண்ணன் லட்சுமணபெருமாள் மற்றும் நண்பர்கள் இருவருடன் அதே பகுதியில் உள்ள பொன்னுச்சாமி என்பவரது தோட்டத்தில் உள்ள பாசன கிணற்றுக்கு குளிக்க சென்றுள்ளனர்.

    நீச்சல் தெரியாத லோகநாதன் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினார். கிணற்றின் ஆழம் 70 அடி என்பதாலும் கிணற்றில் 60 அடி தண்ணீர் நிறைந்திருந்ததாலும் உடனடியாக லோகநாதனை மீட்க முடியவில்லை.

    இதுகுறித்து துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினரும் நீரில் மூழ்கியவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பின்னர் மின் மோட்டார்கள் மூலம் கிணற்றில் உள்ள நீரை வெளியேற்றி லோகநாதனை மீட்க முடிவு செய்து மின் மோட்டார்கள் மூலம் கிணற்றில் உள்ள தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் நீரில் மூழ்கி இறந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபடும் காளை என்பவரை வரவழைத்த பின் அவர் நீரில் மூழ்கி இறந்தவரின் உடலை மீட்டார்.

    இதையடுத்து இறந்தவரின் உடலை புத்தானத்தம் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக மணப்பாறை வட்டாட்சியர் கீதாராணி மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவஇடத்திற்கு வந்து மீட்பு பணியை துரிதப்படுத்தினர். இச்சம்பவம் குறித்து புத்தாநத்தம் போலீசார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மாமல்லபுரத்தில் நடந்த விநாயகர் சிலை கரைக்கும் நிகழ்ச்சியை நேரில் பார்ப்பதற்காக நீரஜ்குமார் குடும்பத்தினருடன் வந்திருந்தார்.
    • கடல் நீரை குடிநீராக்கும் ஆலை அருகில் உள்ள கடற்கரையில் நீரஜ்குமார் உடல் கரை ஒதுங்கியது.

    மாமல்லபுரம்:

    பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் நீரஜ்குமார் (வயது 18). கல்லூரி மாணவர். பி.ஏ.முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    இவர் தாம்பரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார். நேற்று மாமல்லபுரத்தில் நடந்த விநாயகர் சிலை கரைக்கும் நிகழ்ச்சியை நேரில் பார்ப்பதற்காக நீரஜ்குமார் குடும்பத்தினருடன் வந்திருந்தார். பின்னர் கடற்கரை கோவில் அருகே கடலில் குளித்தார்.

    அப்போது ராட்சத அலை அவரை கடலுக்குள் இழுத்து சென்றது. அவரை குடும்பத்தினர் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. அவரை தேடி வந்தனர்.

    இந்தநிலையில் இன்று காலை மாமல்லபுரம் அடுத்த சூலேரிக்காடு கடல் நீரை குடிநீராக்கும் ஆலை அருகில் உள்ள கடற்கரையில் நீரஜ்குமார் உடல் கரை ஒதுங்கியது. மாமல்லபுரம் போலீசார் உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர்.

    ×